25.7 C
Jaffna
March 2, 2025
Pagetamil
கிழக்கு

இலஞ்சம் வாங்கிய போது கையும் மெய்யுமாக சிக்கிய வருமானவரி உத்தியோகத்தர்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையில் பணியாற்றும் வருமானவரி உத்தியோகத்தர் ஒருவர் இன்று இலஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதி மன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொமும்பில் இருந்த வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச சபைக்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் நபரொருபரிடம் குறித்த உத்தியோகத்தர் இலஞ்சத்தினை பெற்ற போது கைது செய்துள்ளனர்.

கைதானவர் மட்டக்களப்பு நகரில் வசிக்கிறார்.

ஒரு நிலத்தை விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்காக மட்டக்களப்பை சேர்ந்த தொழிலதிபரிடம் 300,000ரூபா இலஞ்சம் கோரியுள்ளார். இது குறித்து தொழிலதிபரால் முறையிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 25,000 பணம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இன்றைய தினம் இரண்டாவது தடவையாக 25,000 பணத்தை இலஞ்சமாக பெற்றபோதே அவர் கைதாகினார்.

கைதானவரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன், இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைவாக 18 ஆம் திகதி மேலதிக விசாரனைகளுக்காக கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அனுமதியளித்தார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

குடிசைகளை எரித்த வனவளத் திணைக்கள அதிகாரிகள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!