கைது செய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் உறுப்பினர் உள்ளிட்ட 3 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊரெழு, பொக்கணை பகுதியில் நேற்று இரவு கடமையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் தலைக்கவசம், முகக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் உறுப்பினர் சிவலிங்கம் நிமலை தடுத்து நிறுத்தினர்.
இதன்போது, அங்கு குவிந்த பிரதேசவாசிகள் பொலிசாருடன் தர்க்கப்பட்டனர். அங்கு பரபரப்பான நிலைமையேற்பட்டதை தொடர்ந்து பொலிசார் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினருக்கு தண்டச்சீட்டு வழங்கப்பட்டது.
இன்று காலை வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இன்று மாலை அவர்களை கோப்பாய் பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
மூவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.