26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

உலகத் தலைவர்களின் ஊழல்களை அம்பலப்படுத்திய பண்டோரா பேப்பர்: நிருபமா ராஜபக்ச, சச்சினும் பெயரும் உள்ளது!

உலக நாடுகளின் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாயை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள், ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று வெளியானது. இதில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச, இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட 300 பேருக்கும் அதிகமானவர்கள் பற்றிய ஆவணங்கள் உள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்யும் தகவலின் இரகசிய ஆவணங்கள், 2016ல் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியான இந்த ஆவணங்களை, பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான மொசாக் பொன்செகா வெளியிட்டது. இதில், ஒரு கோடிக்கும் அதிகமான இரகசிய ஆவணங்கள் கசிந்தன.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தனர். பல தனி நபர்கள், நிறுவனங்களின் முறைகேடுகள் இதில் வெளியாகின. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இதில் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் அதேபோல் நேற்று பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

இதில், இதில் ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான நிருபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் பற்றிய தகவல்களும் உள்ளன. லண்டன் மற்றும் சிட்னி, அவுஸ்திரேலியாவில் ஆடம்பர குடியிருப்புகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் சிங்கப்பூர் அறக்கட்டளை நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் உண்மையான பொருளாதார பயனாளிகள் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அமைச்சர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளதாகவும், அறக்கட்டளை என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அவரது மனைவி ஷெரி பிளேர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், கென்யா ஜனாதிபதி உஹுரு உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சைப்ரஸ் நாட்டு ஜனாதிபதி நிக்கோஸ் அனஸ்தேசியேட்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஈக்வடோர் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ உட்பட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் செய்துள்ள முறைகேடுகள் குறித்த ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், விளையாட்டு பிரபலங்களும் இதில் உள்ளடங்கியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

Leave a Comment