பிரதமரின் மகன் ரோஹித ராஜபக்ஷவின் செல்லப் பூனை காணாமல் போயிருந்த நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ, தனது பேஸ்புக்கில், தனது செல்லப் பூனை காணாமல் போனதாக பதிவிட்டிருந்தார்.
பெத்தகானவில் உள்ள அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட இந்த அதிக மதிப்புள்ள பூனையைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்றும், அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது செல்லப்பிராணியை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டு, அனைவருக்கும் நன்றி கூறி, பதிவொன்றை இட்டுள்ளார்.
அவந்த் கார்ட் நிறுவன உரிமையாளர் நிசங்க சேனாதிபதியின் வீட்டில் இந்த பூனை இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரோஹிதவும், நிசங்கவும் அயலவர்கள் என்றும், நிசங்க சேனாதிபதியின் வீட்டில் 35 பூனைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.