பிரபல நட்சத்திர தம்பதிகள் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிய முடிவு செய்து அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவு குறித்து நடிகர் நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜூனா உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், ‘கனத்த இதயத்துடன் இதை நான் சொல்கிறேன். சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையில் நடந்தது மிகவும் துரதிஷ்டமானது. கணவன் மனைவிக்கு இடையே நடப்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். அதில் நாங்கள் தலையிட முடியாது. இருப்பினும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவருமே எனக்கு மிகவும் பிரியமானவர்கள். எங்கள் குடும்பம் எப்போதும் சமந்தாவுக்கு ஆதரவை அளிக்கும். அவர் எப்போதும் எங்களுடைய பிரியமானவராக இருப்பார். கடவுள் இருவருக்கும் மனவலிமையை கொடுக்க வேண்டி கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 2, 2021