இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷவர்த்தன் ஷ்ரிங்லா இன்று (2) இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பில் அவர் இலங்கைப் பயணம் மேற்கொள்வதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று தொடக்கம் எதிர்வரும் 5ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.
இதன்போது கொழும்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டிக்கு அவர் விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 3ஆம் திகதி அவர் யாழ்ப்பாணம் விஜயம் செய்கிறார். அன்று மாலை பலாலி விமானத்தளம் வழியாக யாழ்ப்பாணம் வருபவர், பலாலி சர்வதேச விமான நிலையத்தை பார்வையிடுவார். பின்னர் யாழ் நகரில் அமைக்கப்படும் இந்திய கலாச்சார மையத்தை பார்வையிடுவார்.
யாழ் புறநகரிலுள்ள ஹொட்டலொன்றில் தங்கியிருந்துவிட்டு, மறுநாள் கொழும்பு புறப்பட்டு செல்வார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1