25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ!

வரும் 2022 ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்ரேட், அத்துடன் தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஆனால், தனக்குப் பதிலாக தனது மகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

“பிலிப்பைன்ஸ் மக்கள் நான் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் என்று நினைக்கவில்லை. இனியும் நான் அப்பதவியில் இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக அமையும். அதனால் இன்று நான் எனது ஓய்வை அறிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதியும் சர்ச்சையும்

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதிரொட்ரிகோ டுட்ரேட் சர்ச்சைகளின் நாயகர். இவர் பிலிப்பைன்சில் கோலோச்சிய போதைப்பொருள் கும்பல்களை சுட்டுக்கொன்று கட்டுப்படுத்தினார். போதைப்பொருளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் நடத்தப்பட்ட படுகொலையில் சிறு குழந்தைகள் உள்ளிட்ட 30,000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மனித உரிமை ஆர்வலர்களின் பேச்சை இவர் துளியும் சட்டை செய்வதில்லை. இந்த சட்ட விரோதக் கொலை செய்வதற்கென்றே தனியாக ஒரு கும்பலை இவர் வைத்திருக்கிறார். 72 வயதாகும் ரொட்ரிகோ டுட்ரேட் 1986 ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டுவரை தேவோ நகரின் மேயராக இருந்தவர். அவரது ஆட்சிக்கு பிலிப்பைன்ஸில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது,

இந்நிலையில் அவர், அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அரசியல் ஆய்வாளர்கள், டுடெர்டே 2016 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் மீதான போரில் ஆயிரக்கணக்கான கொலைகள் தொடர்பாக, பிலிப்பைன்சிலோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ சாத்தியமான சட்ட நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு விசுவாசமான வாரிசைக் கொண்டிருப்பது மிக முக்கியம் என்று கூறுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

Leave a Comment