25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
இலங்கை

புலிகளை உருவாக்க சயனைட் வாங்கிக் கொண்டு வந்தாராம்: தமிழகத்தில் இலங்கையருக்கு சிறை!

இலங்கையிலிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இருந்து சுமார் 500 சைனைட் குப்பிகள் மற்றும் சைனைட் பவுடர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற போது ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீசார் உச்சிப்புளியில் வைத்து கிருஷ்ணகுமார், சசிகுமார், ராஜேந்திரன், சுபாஸ்கரன் ஆகியோரை கைது செய்தனர்.

இதில் தப்பி ஓடிய குமரன் என்ற உதய குமார் என்பவரை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வைத்து க்யூ பிரிவு போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் 4 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.

இவர் மீது இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தது போலியான பெயரில் நிரந்தர வருமான வரி கணக்கு எண் துவக்கியது, மற்றும் ஆதார் கார்டு வாங்கியது, சிம்கார்டு வாங்கியது என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் கடும் சிரமத்தில்

east tamil

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

east tamil

துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Pagetamil

பட்டம் விட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

Leave a Comment