மலாவி நாட்டில் முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தென் கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியின் பாராளுமன்றத்தில் 2019-19 வரை துணை சபாநாயகராக செயல்பட்டவர் செல்மென்ட் ஷிவாலா (50) . மாற்றுத்திறனாளியான இவர் தனது பதவிகாலம் முடிவடையும் சமயத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய சில மாதங்களில் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால், விபத்துக்குள்ளான காரை சரி செய்ய ஆகும் செலவை பாராளுமன்றம் தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துவந்தார். ஆனால், அந்த சமயத்தில் காருக்கான காப்பீடை அவர் புதிப்பிக்காததால் அது காலாவதியானது. இதனால், காருக்கான செலவை ஏற்கமுடியாது என்று செல்மெண்ட் ஷிவாலாவின் கோரிக்கையை பாராளுமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், செல்மென்ட் ஷிவாலா நேற்று பாராளுமன்ற வளாகத்திற்கு சக்கர நாற்காலியில் வந்தார். பாராளுமன்ற வளாகத்திற்கு வந்த செல்மென்ட் தனது காரை சரிசெய்ய ஆகும் செலவை பாராளுமன்றம் ஏற்காததால் மிகுந்த மனவேதனை மற்றும் விரக்தியடைந்தார்.
இதனை தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு தான் மறைத்து கொண்டுவந்த துப்பாக்கியால் பாராளுமன்ற வளாகத்திற்குள் தனது தலையில் தானே துப்பாக்கியால் சுட்டு செல்மென்ட் ஷிவாலா தற்கொலை செய்துகொண்டார்.
Former deputy Speaker of #Malawi Parliament and seasoned politician Clement Chiwaya shoot himself dead at Parliament following frustrations with his vehicle scheme entitlement. Turning, turning in the widening gyre, the centre cannot hold…. pic.twitter.com/kNE0F6vWnq
— Jack McBrams (@mcbrams) September 30, 2021
இதற்கிடையில், உயர் பாதுகாப்பிலுள்ள பாராளுமன்ற வளாகத்திற்குள் ஷிவாலா எப்படி துப்பாக்கியுடன் நுழைந்தார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து, பாராளுமன்ற பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.