மன்னாரில் திடீர் இராணுவச் சோதனை: பொதுமக்கள் அசௌகரியம்!

Date:

மன்னார் பகுதியில் இராணுவத்தினர் தற்போது திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று புதன் கிழமை (29) மாலை முதல் மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் மேல் நீதிமன்ற பிரதான வீதி ஆகிய பகுதிகளில் நிற்கின்ற இராணுவத்தினர் மக்களை சோதனை செய்தனர்.

இன்று வியாழக்கிழமை (30) காலை முதல் குறித்த பகுதிகளில் இராணுவத்தின் சோதனை இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக குறித்த வீதிகள் ஊடாக மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் பயணிப்பவர்கள் நிறுத்தப்பட்டு அவர்களின் உடமைகளை சோதனை செய்யப்படுவதோடு, வாகனங்களும் சோதனை செய்யப்படுகிறது.

திடீர் என குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருவதால் அவ் வீதியூடாக செல்லும் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை சர்ச்சை: சீ.வீ.கே.சிவஞானம் விளக்கம்!

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிசார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்