இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகிறார்!

Date:

இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா ஒக்டோபர் மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் சந்தித்து பேசியதை தொடர்ந்து, இந்த விஜயம் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒக்டோபர் 2 மற்றும் 5 ஆம் திகதிகளுக்கு இடையில் சில முக்கிய இருதரப்பு திட்டங்களை ஷ்ரிங்லா தொடக்கி வைப்பார் என்று புது தில்லியில் உள்ள தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எஸ் ஜெய்சங்கர் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தார். இந்த விஜயம் வெளியுறவு செயலாளராக ஷ்ரிங்லாவின் முதல் இலங்கையாகும்.

பங்களாதேஷ், இலங்கை, மியான்மர் மற்றும் மாலைதீவுகளை மேற்பார்வையிடும் அவர், புதுடில்லியில் இணைச் செயலாளராக இருந்த நிலையில், இந்திய-இலங்கை உறவுகள் தொடர்பான பிரச்சினைகளில் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...

ஞானசாரரின் கைதி உடை: நீதிமன்றம் வெளியிட்ட கருத்து!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 'பொது பல சேனா'  அமைப்பின் பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்