கனடாவிற்கு போன பெண் தண்ணீர் கொதிக்க வைத்ததால் ஏற்பட்ட பேரனர்த்தம்!

Date:

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தண்ணீரைக் கொதிக்கவைக்க முயன்றபோது காட்டுத் தீ மூண்டதாக ஒரு பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அலெக்ஸாண்ட்ரா சூவர்னேவா என்ற அந்த 30 வயது பெண், கனடாவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டபோது தீப்பற்றியதாகக் கூறப்பட்டது.

வேண்டுமென்றே தீவைத்ததாக அவர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

சென்ற புதன்கிழமை (22) தொடங்கிய காட்டுத் தீ இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. அதில் இதுவரை 8,500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்துவிட்டது.

சூவர்னேவா, நடைப்பயணத்தின்போது தாகமாக இருந்ததால், அங்குள்ள குட்டையில் இருந்த தண்ணீரைக் வடிகட்டி அருந்த முயன்றதாக கூறியுள்ளார்.

ஆனால், அது சாத்தியமில்லாமல் போக, தண்ணீரை கொதிக்க வைக்க முயன்றார். ஆனால் நெருப்பை உண்டாக்க முடியவில்லை, நீரை அருந்தி விட்டு, நீரோடையலிருந்து மேல் நோக்கி சென்றதாக அவர் சொன்னார்.

பின்னர் புதரில் மாட்டிக்கொண்ட அவர், தீயணைப்புத் துறையைத் தொடர்புகொண்டார்.

பின்னர் கைதுசெய்யப்பட்ட அவரிடம் தீப்பற்றவைக்கும் கருவிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 9 ஆண்டுகளிற்கு மேல் சிறைத்தண்டனைஅனுபவிக்க வேண்டியிருக்கும்.

 

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்