28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil
குற்றம்

குடும்பத் தகராற்றினால் விபரீதம்: மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்!

குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த கணவனை, பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் (26) இரவு 7.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. 123, 5 வது லேன், கரதமண்டிய, எம்பிலிபிட்டிய புதிய நகர பகுதியில்  இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான இந்திரா மல்காந்தி (35)  என்பவரே உயிரிழந்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய நகரில் மலர்ச்சாலை நடத்தி வரும் கணவன், துப்பாக்கியினால் மனைவியின் தலையில் சுட்டுக் கொன்றுள்ளார்.

கணவன், மனைவிக்கிடையில் நீண்டகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

சம்பவ தினம், தம்பதியினருக்கிடையில் தகராறு ஏற்பட்டதையடுத்து, மனைவி தொலைபேசியின் மூலம் முச்சக்கர வண்டி சாரதியொருவரை வீட்டுக்கு அழைத்துள்ளார். கணவர் தகராறு செய்வதாகவும், தன்னை கொல்லப் போகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி அந்த வீட்டிற்கு வந்ததும், தனது ஒரு வயது குழந்தையுடன் தாயார் வீட்டை விட்டு வெளியேறிய போது, குழந்தையை விட்டுவிட்டு வெளியேறுமாறு சச்சரவில் ஈடுபட்டபடி வந்த கணவன், வீட்டின் வெளிப்புறத்தில் மனைவியின் தலையில் துப்பாக்கியினால் சுட்டு படுகொலை செய்தார்.

சந்தேகநபரான வீரசிங்க ஆராச்சிகே தம்மிக்க குமார என்ற அனுரா (47) பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முழங்காவில் உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு

Pagetamil

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil

சிறுமியின் தலைமுடியை வெட்டிய வளர்ப்புத்தாய் கைது!

Pagetamil

மொடலாக மாற ஆசைப்பட்ட 23 வயது யுவதி வல்லுறவு!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

Leave a Comment