யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அந்த பிரதேசத்தின் முக்கிய ரௌடியாக ‘வெட்டுகுமார்’ என்பவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள மற்றும் சிலரையும் தேடி வருகின்றனர்.
கடந்த 2 ஆம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தை சேர்ந்த வாள்வெட்டு குழு ரௌடியான வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டமையால், 6 குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ரௌடி வெட்டிக்குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளான். அவனது சகோதரன் ஜெயா என்ற ரௌடி உட்பட தலைமறைவாகியுள்ள ஏனைய ரௌடிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.