24.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

ஒரு கொலை வழக்கு… 2 பிடியாணைகள்… பல வாள்வெட்டுக்கள்: யாழில் 2 வருடங்களாக பொலிசாருக்கு டிமிக்கி விட்ட பயங்கர ரௌடி கைது!

யாழ் மாவட்டத்தில் பொலிசாரால் 2 வருடங்களிற்கு மேலாக வலைவீசி தேடப்பட்டு வந்த பயங்கரமான ரௌடியான கனோஜி என்பவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இரகசிய தகவலொன்றையடுத்து, யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும், மானிப்பாய் பொலிஸ்ஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பிரபல ரௌடி கனோஜி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை, முனை பகுதியை சேர்ந்த இவர், ரௌடிக்குழுக்களிற்குள் பிபிடி கனோஜி என அறியப்பட்டார்.

சுதுமலை மேற்கில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த அவர், அயலுள்ள தோட்ட வெளியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் பல வன்முறைகளை ஈடுபட்டு வரும் இவர், 2019ஆம் ஆண்டில் இருந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.

தனுறொக் ரௌடிக்குழுவை சேர்ந்த இவர், கொலைச்சம்பவமொன்றின் பிரதான சந்தேகநபராவார்.

கோண்டாவில், உப்புமடம் பகுதியில் ஹாட்வெயார்  உரிமையாளரின் தலையில் கொட்டனால் அடித்ததில், அவர் கோமாவில் இருந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஆவார்.

இவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் இரண்டு பகிரங்க பிடியாணைகள் உள்ளன.

ஆவா குழுவினர் உள்ளிட்ட சில வீடுகள் உடைத்தமை, வாள்வெட்டு, ராஐா கிறீம் கவுஸில் மோட்டார் சைக்கிள் பறித்து சென்றது என வழக்குகள் இவர் மீது உள்ளது.

இவரது தாயார் வெளிநாட்டில் வசிக்கிறார். அம்மம்மாவுடன் வசித்து வந்த இவர், கடந்தஇரண்டு வருடங்களாக தலைமறைவாக வசித்து வந்தார்.

வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர், ஓரிரு மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அத்துடன், தனது தோற்றத்தையும் வெகுமாக மாற்றி, பொலிசாரால்அடையாளம் காணமுடியாதவாறு உலாவியுள்ளார்.

அவர் பதுங்கியிருந்த வீட்டில், முகமூடியொன்றும் மீட்கப்பட்டது.

அவருடன் கைதான ஏனைய 3 பேரும் மானிப்பாய், சுதுமலையை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

மேலதிக விசாரனைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

காரில் மதுபோதையில் வந்திறங்கிய மாணவி – ஆசிரியர் கைது

east tamil

மீனவ பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி – ரவிகரன்

east tamil

மஹிந்தவின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் – கோரிக்கை

east tamil

பெப்ரவரி 4 கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு!

Pagetamil

மஹிந்தவுக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்படலாம்!

Pagetamil

Leave a Comment