25 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

தியாக தீபத்தை நினைவுகூர்ந்தார் சிறிதரன் எம்.பி!

தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உயிர்நீத்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரினையும் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

தாயகம் எங்கும் திலீபன் அவர்களின நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் இராணுவம் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்

தியாகி திலீபன் 1987 ஆண்டு புரட்டாதி மாதம் 15 ஆம் திகதி 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நீராகாரம் ஏதுமின்றிய அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு புரட்டாதி 26 ஆம் திகதி சாவினை தழுவியிருந்தார்.

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் போன்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே திலீபன் உண்ணாநோன்பு இருந்து தன்னுயிரை ஈகம் செய்தார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

“இந்தியாவிடம் முட்டை வாங்கி சீனாவுக்கு கோழி விற்பது நகைப்புக்குறியது” – சசிகுமார்

east tamil

தனியார் பேருந்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Pagetamil

கிளிநொச்சி பேரூந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக் கழிவை உடனடியாக தடுக்க தவறின் சட்ட நடவடிக்கை – கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி

Pagetamil

அரசியல் தீர்வைப் பற்றிப் பற்றிய கதை (விடல்)கள்

Pagetamil

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் – மீனவர்கள் எதிர்ப்பு

east tamil

Leave a Comment