25.7 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

யாழ் பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

பிரத்தியேகமான இடமொன்றில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது.

1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.48க்கு அவர் உயிர்நீத்தார். அவர் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு மறைந்த காலப்பகுதி வருடாந்தம் அவருக்கான நினைவேந்தல் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ள நிலையில், தடைகளையும் தாண்டி திலீபனுக்கு இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹெராயின் கடத்தல்: 26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை

east tamil

உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

Pagetamil

நுண் நிதிக்கடன் தொடர்பில் விரைவில் திருத்தம்

east tamil

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Pagetamil

உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

east tamil

Leave a Comment