வவுனியாவில் இன்று 6 மரணங்கள்!

Date:

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மேலும் 06 மரணங்கள் இன்று (25) பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 06 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் ஆண் ஒருவரும் (வயது 80), கன்னாட்டி கணேசபுரத்தில் ஆண் ஒருவரும் (வயது 77), கந்தசாமி கோவில் வீதியில் பெண் ஒருவரும் (வயது 91), தேக்கவத்தை பகுதியில் பெண் ஒருவரும் (வயது 74), தோணிக்கல் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 83), சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது58) கோவிட் தொற்றால் மரணித்தவர்களாவர்.

இந்நிலையில் மரணித்த 6 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...

ரீல்ஸ் எடுக்க 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய சிறுவன் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில், ரீல்ஸ் எடுப்பதற்காக 60 அடி உயர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்