விஞ்ஞான அடிப்படையில் பிசிஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், கொரோனா வைரஸ் தொடர்பான புதிய மாறுபாடுகள் மற்றும் சிக்கல்களை சுகாதார அதிகாரிகள் அடையாளம் காண முடியும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக உறுப்பினர் வைத்தியர் ஹன்சமல் வீரசூரிய பேசுகையில், நடத்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் ஒரு தொற்றுநோயை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாது. சமூகத்தில் தொற்றாளர்களை கண்டறிந்து கட்டுப்படுத்த சீரற்ற சோதனைகளை அதிகரிப்பதன் அவசியம் என்றார்.
அவ்வாறு செய்யத் தவறினால் வைரஸின் புதிய பிறழ்வுகளை அடையாளம் காண முடியாமல் போகும் என எச்சரித்தார்.
இலங்கையில் புதிய மாறுபாடுகள் தோன்றுகிறதா என்று சுகாதார அதிகாரிகளுக்கு தெரியாது என்று அவர் கூறினார்.
தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவுடன் தொற்றுநோய் குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்க முடியாது என்று கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கையின் சனத்தொகையில் 70% க்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி போட்டால் தொற்றுநோயை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்றார்.