Huawei நிறுவனத்தின் தலைமை நிதியதிகாரி மெங் வன்ச்சோ தமக்கு எதிரான மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒத்திவைக்க அமெரிக்க அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
அந்த உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால், வோஷிங்டனிற்கும் பெய்ஜிங்கும் இடையே நீடித்த 3 வருட சர்ச்சை ஒரு முடிவிற்கு வந்தது.
அந்தச் சர்ச்சையால் சீனா, கனடா ஆகியவற்றுக்கு இடையிலான உறவிலும் விரிசல் ஏற்பட்டிருந்தது.
மெங் தற்போது கனடாவை விட்டு சீனாவிற்குப் புறப்பட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, கனடிய அதிகாரிகள் மெங்கை 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வேவுக்குற்றங்களின் பேரில் கைதுசெய்தனர்.
Huawei நிறுவனம், Skycom என்ற நிறுவனத்துடன் கொண்டிருந்த தொடர்பு பற்றி, HSBC வங்கியிடம் மெங், சரியான தகவல்களை வழங்கவில்லை என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
அதன் காரணமாக, ஈரான் மீது அமெரிக்கா விதித்த தடைகளை மீறும் அபாயத்தில் வங்கி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மெங் கைதிற்கு பதிலடியாக, சீனாவால் கைது செய்யப்பட்ட 2 கனேடிய இராஜதந்திரிகளும் 3 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.