மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வர ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றம் திருவிழா தேரோட்டம் என்பன நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் பரவலால் இந்த வருடம் இடம்பெறாதென ஆலய பரிபாலன சபையால் அறிவிக்கப்பட்டது.
ஆயினும் பூசைகள் மட்டும் திருவிழா குடி சார்ந்த அடியார்கள் ஓரிருவர்ரால் கடந்த ஒரு வாரமாக நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (22) புதன்கிழமை இடம்பெற்ற ஒரு குடிசார் பூசையின்போது ஆலய வண்ணக்கமார் நிர்வாகத்தினருக்கு தெரியாமல் சுவிஸ்நாட்டில் இருந்து வந்த ஒருவர் பட்டாசுகளை வெளிவீதியில் எவருக்கும் தெரியாமல் திடீரென கொழுத்தியுள்ளார்.
இதனை அவதானித்தவர்கள் அப்பகுதி சுகாதார பரிசோதகர், கொக்கட்டிச்சோலை பொலிசாரின் கவனத்திற்கு தொலை பேசிமூலமாக தெரியப்படுத்தியதை அடுத்து ஆலய தலைவருக்கு அப்பகுதி சுகாதார பரிசோதகரால் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது
தற்போதய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வர ஆலயம் 15, பேருடன் அன்டியன் பரிசோதனை மேற்கொண்டு ஆலய கொடியேற்றம் உள்திருவிழா செய்வதற்கு சம்பந்தப்பட்ட பிரதேச சுகாதார அத்தியட்சர் ஆலோசனை வழங்கிய நிலையில் ஆலய வண்ணக்கமார், ஆலய குருமார் இறுதி நேரத்தில் இதற்கு சம்மதம் தெரிவிக்காமையால் இந்த வருடம் வருடாந்த உற்சவம் இடம்பெறமாட்டாது என ஆலய வண்ணக்கமார் ஊடக மாநாட்டில் அறிவித்தனர்,
இதேவேளை கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வர ஆலய பிரதம குரு சச்சிதானந்தக்குருக்கள் சுகவீன காரணமாக ஆலய பூசைகளில் கலந்து கொள்ளவில்லை என ஆலய நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருடாந்த தேரோட்டம் இடம்பெற இருந்தபோதும் இவ்வருடம் நாட்டின் சூழலை கருத்தில் கொண்டு தேரோட்டம் அடுத்த வருடம் வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!