வவுனியாவில் அதிகரித்த கோவிட் சடலங்களை கட்டுப்படுத்த ஒரே நாளில் 8 சடலங்கள் தகனம்

Date:

வவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்கள் அதிரித்து செல்லும் நிலையில் நிலமையை சீர் செய்யும் முகமாக சுகாதாரப் பிரிவினரும், நகரசபையினரும் இணைந்து இன்று (21.09) 8 சடலங்களை தகனம் செய்யதனர்.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் பரவல் காரணமாக தொடர்ந்தும் பலர் மரணித்து வரும் நிலையில் கோவிட்டால் மரணமடைந்தவர்களின் சடலங்கள் தேக்கமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சடலங்கள் தேக்கமடைவதை தவிர்க்கும் பொருட்டு வவுனியா சுகாதாரப் பிரிவினரும், நகரசபையினரும் இணைந்து காலை 7 மணியில் இருந்து மாலை 8 மணி வரை சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை பூந்தோட்டம் மின் மாயானத்தில் முன்னெடுத்திருந்தனர். இதன்படி 8 சடலங்கள் அதிகபட்சமாக ஒரே நாளில் தகனம் செய்யப்பட்டப்பட்டன.

வழமையாக நாள் ஒன்றுக்கு மின் தகன இயந்திரத்தின் வினைததிறனை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 6 வரையிலான சடலங்களே எரியூட்டப்பட்டு வந்தன. அத்துடன் இயந்திரமும் அவ்வப்போது பழுதடைந்தமையாலும், கோவிட் உயிரிழப்புக்கள் தொடர்கின்றமையாலும், ஏனைய மாவட்டங்களில் இருந்தும் சடலங்கள் வருவதானாலும் வவுனியாவில் பல சடலங்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் அதனை துரிதமாக தகனம் செய்யும் முகமாக இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...

இலங்கை தமிழ் அரசு கட்சி வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும்!

இலங்கைத் தமிழ் அரசு கட்சி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக...

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்