UPDATE: ஏன் கணவனை அடித்துக் கொன்றேன்?: கைதான யாழ் பெண் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்! (PHOTOS)

Date:

யாழ்ப்பாணம், அரியாலையில் தனது கணவனை திருகுவளையால் அடித்துக் கொன்ற மனைவி, அதற்கான காரணத்தை பொலிசாரிடம் வெளிப்படுத்தியுள்ளார்

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார், 3ஆம் குறுக்குதெருவில் நேற்று (18) இரவு இந்த கொலைச்சம்பவம் நடந்தது

சம்பவத்தில் துரைராசா செல்வராசா (32) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த அவர், சில வருடங்களின் முன் ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண்ணை காதல் திருமணம் முடித்தார். தற்போது, பூம்புகாரில் வசித்து வரும் தம்பதிக்கு பெண் குழந்தையொன்றும் உள்ளது.

இராணுவத்தின் மின்னியல், பொறியியல் பிரிவில் சில காலம் பணியாற்றிய அவர் ஒழுங்கீனம் காரணமாக அங்கிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மது, போதைக்கு அடிமையான அவர், தினமும் தன்னை துன்புறுத்துவதாக மனைவி தெரிவித்துள்ளார்.

பல்வேறு தொழில்களை செய்த அவர், தற்போது அரியாலையில் மணல் விற்பனை தொழிலில் ஈடுபடுபவர்களிடம் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கம் போல போதையில் நேற்றிரவும் தன்னை தாக்கியதாகவும், வீட்டிலிருந்த திருகுவளையை எடுத்து தாக்கியதில் அது கணவனின் தலையில் பட்டு அவர் உயிரிழந்து விட்டார் எனவும் கைதான மனைவி தெரிவித்துள்ளார்.

25  வயதான குடும்பப் பெண் யாழ்ப்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்