13 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்: 71 வயது தாத்தா கைது!

Date:

பலாங்கொட பகுதியில் 12 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்து, கர்ப்பிணியாக்கிய 71 வயதான தாத்தாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரமிட்டிகல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

அந்த பகுதியிலுள்ள தனியார் வைத்திய நிலையத்திற்கு சென்ற சிறுமி, சில மாதங்களாக தனக்கு மாதவிடாய் நிகழவில்லையென தெரிவித்துள்ளார்.

தாயாருடன் சிகிச்சைக்கு வருமாறு வைத்தியர் கூறியதை தொடர்ந்து, தனது தாயாருடன் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவர்களை பலாங்கொட ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியர் அனுப்பியுள்ளார்.

சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு 5 மாத கர்ப்பிணியென்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியதில், சிறுமியின் 71 வயதான தாத்தாவே பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

சிறுமி தற்போது, பலாங்கொட ஆதார வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாத்தா கைது செய்யப்பட்டு, பலாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அவர் இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்