தாஜ் மஹாலுக்கு சென்ற அஜித்துடன் ரசிகர்கள் உற்சாகமாக செல்ஃபி எடுத்து பகிர்ந்து வருகிறார்கள்.
ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துவிட்டார் அஜித். படத்தின் டீஸர் அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
வலிமை படப்பிடிப்பை முடித்த கையோடு ஹைதராபாத்தில் நடந்த பைக் ரைடிங் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அஜித். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில் அஜித் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருக்கும் காதல் சின்னமான தாஜ் மஹாலுக்கு சென்றிருக்கிறார். அஜித்தை பார்த்ததும் அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முந்தியடித்தனர். ஆனால் அவர் பொறுமையாக அனைவருக்கும் போஸ் கொடுத்தார்.
அஜித்தின் இந்த குணம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகிறார்கள். மேலும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் புகைப்படங்களில் அஜித் செம ஃபிட்டாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. வலிமையை அடுத்து அஜித்தை வைத்து படம் பண்ணப் போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
தலயை யார் இயக்கினாலும் சரி, ஆனால் போனி கபூர் மட்டும் அந்த படத்தை தயாரிக்கவே கூடாது என்று அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். வலிமை படத்தை தயாரித்திருக்கும் போனி கபூர் அப்டேட் கொடுக்காமல் சுமார் இரண்டு ஆண்டுகள் அல்லாட வைத்ததால் ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள்.