வீட்டிலேயே குழந்தை பிரசவித்த 14 வயது மாணவி!

Date:

14 வயதான சிறுமியொருவர் வீட்டிலேயே குழந்தை பிரசவித்துள்ளார்.

பூஜாபிட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

14 வருடங்களும் 9 மாதங்களுமான சிறுமி வீட்டிலேயே குழந்தையை பிரசவித்துள்ளார். அவர் குழந்தை பிரசவிக்கும் வரை, அவர் கரப்பமாக இருந்ததை அறிந்திருக்கவில்லையென வீட்டிலுள்ளவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலேயே குழந்தை பிரசவித்த பின்னர், அதிக இரத்தப் போக்கு காரணமாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கிராமத்திற்கு வந்த சென்ற 29 வயதான ஒருவருடனான காதலால் அவர் கர்ப்பமாகியது தெரிய வந்தது.

அவர் கலகெதர பகுதியில் வசிக்கும் திருமணமானவர். அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சில காலத்திற்கு முன்பு தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக அவர் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சுகாதாரத் துறையை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் எம்.பிக்கள் நியமனம்

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்