நிர்ணய விலைக்கு அதிகவிலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்!

Date:

வவுனியாவில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் விற்பனைசெய்யப்பட்ட ஒரு தொகை சீமேந்து மூடைகள் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் வீதியில் இன்று காலை லொறி ஒன்றில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்த சீமேந்து மூடைகள் தொடர்பாக வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் விசாரணையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சீமேந்து மூடைகளில் அச்சிடப்பட்டிருந்த விலைக்கு அதிகமாக அவை விற்பனை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக குறித்த முகவர் மீது வழக்குத்தாக்கலினை செய்த பாவனையாளர் அதிகாரசபை, ஏனைய சீமேந்து மூடைகள் அனைத்தையும் அதன் பெறுமதிக்கேற்ப்ப நிர்ணய விலையினை முகவரிடம் செலுத்தி, மாவட்டத்தில் அமைந்துள்ள அரசாங்க திணைக்களங்களின் கட்டுமானத்தேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்