முல்லைத்தீவு வைத்தியசாலையிலிருந்து கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்திற்குள்ளாகியது.
முல்லைத்தீவு – கொக்குளாய் வீதியில் நேற்று முன்தினம் (15) மாலை இந்த விபத்து நடந்தது.
திருகோணமலை நோக்கி சென்ற வாகனம், முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது ஊர்தி சாரதி படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வாகனமும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம், நீண்ட நாள்களாக எரியூட்டப்பாத நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.
வவுனியா போன்ற வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, திரும்பிக்கொண்டு வந்த வைத்திருந்த நிலையில், சடத்தை திருகோணமலையில் எரியூட்டுவதற்காக நேற்று முன்தினம் (15) மாலை எடுத்து சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த சாரதி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் வேறொரு வாகனத்தின் மூலம் சடலம் திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டது.