Pagetamil
முக்கியச் செய்திகள்

வடக்கு, கிழக்கு சிறைகளிற்கு எம்மை மாற்றுங்கள்: தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!

பாதுகாப்பு கருதி வடக்கு – கிழக்கில் உள்ள சிறைச்சாலைகளுக்கு தம்மை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தம்மிடம் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்திற்கு பிற்பாடு காலையில் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க முயன்றோம். ஆரம்பத்தில் எமக்கு அனுமதி கிடைக்கவில்லை. சிறை இராஜாங்க அமைச்சின் அனுமதி இல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்க முடியாபது என கூறியிருந்தார்கள்.

அதன் பின் நாங்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு தொடர்பு எடுத்து பேசினோம். ஆனால் அது தோல்வியடைந்தது. சில மணித்தியாலத்தின் பின் இராஜாங்க அமைச்சின் செயலாளர் தொடர்பை ஏற்படுத்தி அனுமதி வழங்க முடியும். நீங்கள் வரும்பினால் பார்க்க முடியும் எனத் தெரிவித்தார். அதன்பின் மதியம் 12.30 இற்கு மீண்டும் சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதிகளை சந்திக்க கூடியதாக இருந்தது. இதன்போது உள்ளே சென்று தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 10 அரசியல் கைதிகள் அனுராதபுர சிறையில் இருக்கும் நிலையில் இரண்டு கைதிகளை மட்டுமே சந்திக்க கூடியதாக இருந்தது.

நாங்கள் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுகின்ற போது அதனை கவனிக்க வேண்டும். இந்த விடயம் கணிசமான அளவுக்கு சர்வதேச மட்டத்தில் எடுபட்டுள்ளது. சிறைச்சாலை நிர்வாகத்தில் நாம் தீர்வை எதிர்பார்க்க முடியாது. அவர்களது சூழல், ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து இருக்கக் கூடிய நிலையை உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் கூடுதலாக கைதிகளின் வாக்கு மூலத்தில் தான் தங்கியுள்ளது. அதனால் உண்மைகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்பதை எதிர்பார்கின்றோம் என கைதிகளிடம் கூறினோம். இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்று (15) சிறைச்சாலைக்கு சென்று 8 பேரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதாக இதன்போது அவர்கள் கூறினார்கள். 10 அரசியல் கைதிகள் இருக்கும் நிலையில் 8 பேரின் வாக்கு மூலமே பெறப்பட்டுள்ளது. இதுவரை அது மட்டுமே நடைபெற்றதாக எமக்கு கூறப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமாக அவசரமான ஒரு கோரிக்கையை எமக்கு விட்டனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அல்லது வடக்கு – கிழக்கு பகுதிகளில் உள்ள விசேடமாக தமது வீடுகளுக்கு அண்மையில் உள்ள சிறைச்சாலைக்கு தமது பாதுகாப்பு கருதி மாற்ற வேண்டும் என கோரினர்.

அந்த கோரிக்கையை நாம் அரசாங்கத்திடம் முன்வைப்போம் என்வும், அத்துடன் அவர்களது விடுதலை தொர்பில் இந்த அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுப்போம் என்பதையும் அவர்களிடம் குறிப்பிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment