25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் ‘போதைப்பொருளுக்கு எதிரான போர்’ கொலைகளை விசாரணை செய்ய ஐசிசி அனுமதி!

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டேவின் “போதைப்பொருள் மீதான போர்” மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) அங்கீகாரம் அளித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முன்னெடுத்த கொடூரமான படுகொலைகளிற்கு எதிராக போராடிய பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள்களுக்கு தார்மீக வெற்றியை அளிக்கிறது.

ஹேக் நகரிலுள்ள சர்வதேச தீர்ப்பாயம் வெளியிட்ட அறிவிப்பில், “ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தின் குறிப்பிட்ட சட்டக் கூறுfள் உள்ளன.விசாரணையைத் தொடர “நியாயமான அடிப்படை” இருக்கிறது் என குறிப்பிட்டுள்ளது.

ஐசிசியின் ஆரம்ப விசாரணைக் குழு அறிக்கையில் “போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” பிரச்சாரத்தை ஒரு சட்டபூர்வமான சட்ட அமலாக்க நடவடிக்கையாக பார்க்க முடியாது, மேலும் கொலைகள் சட்டபூர்வமானதாகவோ அல்லது மற்றபடி சட்டபூர்வமான செயல்பாடுகளில் மிகைப்படுத்தலாகவோ பார்க்க முடியாது“ என்றும் கூறியது.

விசாரணைக்கான உத்தரவில் நீதிபதிகள் பீட்டர் கோவிக்ஸ், ரெய்ன் அட்லாய்ட் சோஃபி அலபினி-கன்சோ மற்றும் மரியா டெல் சோகோரோ ஃப்ளோரஸ் லியரா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

குறைந்தபட்சம் 204 பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வழங்கப்பட்ட ஆதாரங்களை அதன் நீதிபதிகள் பரிசீலிப்பதாக நீதிமன்றம் கூறியது, மேலும் அவர்கள் கண்டறிந்தவை, “ஒரு பொதுக் கொள்கைக்கு இணங்க அல்லது தொடர்ந்து பொது மக்களுக்கு எதிரான பரவலான மற்றும் முறையான தாக்குதல் நடந்தது” என்று கூறுகின்றன.

முன்னாள் ஐசிசி சட்டத்தரணி ஃபடோ பென்சவுடா ஜூன் மாதத்தில் ஓய்வு பெறுவதற்கு முன்பு விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தார், “அரச தலைவர்கள், முதன்மையாக பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள், அதிகாரப்பூர்வ சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் போது ஆயிரக்கணக்கான போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் பிற பொதுமக்களைக் கொன்றனர்” என்று குற்றம் சாட்டினார்.

பென்சூடாவின் இளைய சட்டத்தரணி கரீம் கான், இப்போது உண்மையான விசாரணை மற்றும் வழக்கின் சாத்தியமான விசாரணையை மேற்பார்வையிடுவார்.

வியாழக்கிழமை மணிலாவை தளமாகக் கொண்ட வானொலி நிலையமான DZBB க்கு அளித்த பேட்டியில், ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சல்வடார் பனெலோ, டுடெர்டே நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைக்காது என்று தெரிவித்தார்.

விசாரணை நடத்த ஐசிசி புலனாய்வாளர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பனெலோ கூறினார்.

பிலிப்பைன்ஸில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் குற்றங்களை கட்டுப்படுத்த, கடத்தல்காரர்களை கண்ட இடத்திலேயே சுட்டுக்கொல்ல ஜனாதிபதி அங்கீகாரமளித்திருந்தார்.  வரது பிரச்சாரத்தின் போதும், பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் போதைப்பொருள் சந்தேக நபர்களை “கொல்ல” பொலிசாரை வலியுறுத்தி வருகிறார்.

2016 அன்று பதவியேற்ற பிறகு, அவர் அந்த நாட்டின் கத்தோலிக்கத் தலைவர்களால் “பயங்கரவாத ஆட்சி” என்று விவரிக்கப்பட்ட தனது கொடிய பிரச்சாரத்தை உடனடியாகத் தொடங்கினார்.

ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய அரசாங்கத் தரவுகளின்படி, 2016 ஜூன் மதல், 2021 ஏப்ரல் வரை காவல்துறையினரும் மற்ற பாதுகாப்புப் படைகளும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்ற சந்தேகத்தில் குறைந்தது 6,117 பேரை கொன்றது தெரிய வந்தது. ஆனால் ஜூன் 2020 இல் ஐநாவால் மேற்கோள் காட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் குறைந்தது 8,600 பேர் கொல்லப்பட்டதை வெளிப்படுத்தியது.

2017 ல் ஒரு பிலிப்பைன்ஸ் போலீஸ் அறிக்கையில், போதைப்பொருள் போரில் சாதனைகள் என 16,355 “விசாரணைகளின் கீழ் கொலை வழக்குகள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,000 முதல் 30,000 வரை இருக்கலாம் என்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. குழந்தைகள் உட்பட அப்பாவி சந்தேக நபர்களை மிகக்குறுகிய விசாரணையின் பின் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 73 குழந்தைகள் உள்ளனர். அதில், ஐந்து மாத குழந்தையும் உள்ளதாக ஐ.நா விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் போர் கொலைகளை ஆராய ஐசிசி ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, பிலிப்பைன்ஸ்  ஐசிசியிலிருந்து விலகுவதாக ரோட்ரிகோ டுடெர்டே அறிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

இராணுவச் சட்டம் அமல் எதிரொலி: தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

2023 உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

Pagetamil

பல இலட்சம் கோடி சொத்தை உதறிவிட்டு பௌத்த பிக்குவான இலங்கைத் தமிழரின் மகன்!

Pagetamil

Leave a Comment