கோவிட் -19 தொடர்பான மேலும் 118 உயிரிழப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
நேற்று (15) இந்த மரணங்கள் பதிவாகின. நாட்டில் பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 11,817 ஆக அதிகரித்துள்ளது.
61 ஆண்களும் 57 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 12 ஆண்கள் மற்றும் 11 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். 49 ஆண்கள் மற்றும் 46 பெண்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.



