துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் மண்டியிட வைத்த சிறைச்சாலை அமைச்சர்: த.தே.ம.மு அதிர்ச்சி தகவல்!

Date:

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, தமிழ் அரசியல் கைதிகள் இருவரை அழைத்து, தனக்கு முன் மண்டியிட வைத்தார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அவர் நேற்று வெளியிட்ட ருவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர், தமிழ் அரசியல்கைதிகளை அழைத்து தனக்கு முன் மண்டியிட வைத்தார் என அவர் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகள் மண்டியிட வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்ததும் சர்ச்சையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல்...

மீண்டும் இணைய குற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர் சிக்கினர்

சைபர் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வெலிசர இடைநிலை முகாமில்...

‘திமுக அதிமுக ஆதரவில் திருமாவளவன் முதல்வர்?’ : மீண்டும் தொடங்கியதா திரை மறைவு காய் நகர்த்தல்கள்?

விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரான சிந்தனைச் செல்வன் நேற்று காலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்