ஒரே நாளில் கொல்லப்பட்ட 1,400 டொல்ஃபின்கள்

Date:

ஃபாரோ தீவுகளில், ஒரே நாளில் 1,400க்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள் கொல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

டொல்ஃபின்களை வேட்டையாடும் பாரம்பரியம் அங்கு பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தாலும், ஒரே நாளில் அத்தனை டொல்ஃபின்கள் இதுவரை கொல்லப்பட்டதில்லை.

படகுகளால் Skalabotnur கடற்கரையின் தாழ்வான பகுதிக்குத் துரத்தப்பட்ட டொல்ஃபின்கள், பின்னர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டன.

அவற்றின் இரத்தம், தண்ணீரைச் செந்நீராக்கியது.

கொல்லப்பட்ட டொல்ஃபின்கள் உள்ளூர்வாசிகளின் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்பட்டன.

ஆண்டுதோறும், சராசரியாக 600 திமிங்கிலங்களுக்கும் குறைந்த அளவு டொல்ஃபின்களே பிடிக்கப்படுவதாக ஃபாரோ அரசாங்கம் கூறியது.

அந்த வழக்கம், தங்கள் கலாசார அடையாளம் என்றும், நீடித்து நிலைத்திருக்கும் வகையில் உணவு பெற அது உதவுவதாகவும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், அது தேவையற்ற வழக்கம் என்றும் கொடூரமான செயல் என்றும் விலங்குநல ஆர்வலர்கள் குறைகூறுகின்றனர்.

இதற்கிடையே, இம்முறை 1,400க்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள் கொல்லப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் சட்டங்கள் மீறப்படவில்லை வேட்டையாடுபவர்கள் கூறுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்...

படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் பலி

கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன்,...

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்