தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய த.தே.ம.மு!

Date:

ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (15) அஞ்சலி செலுத்தினர்.

நல்லூர் பின் வீதியில் அமைத்துள்ள நினைவிடத்தில் இன்றைய தினம் மாலை 06 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கட்சியின் ஊடக பேச்சாளர் க.சுகாஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

தியாகி திலீபனின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் இந்திய இராணுவ தலையீட்டின் போது, 5 அம்ச உண்ணாவிரத கோரிக்கையை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நீராகாரமும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த தியாகி திலீபன், செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்...

இன்றைய ராசி பலன் | 11.08.2026

## 🔮 இன்றைய ராசி பலன் | 11.08.2026 ♈ மேஷம்: புதிய...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்