25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

ரிஷாத் பதியுதீனின் உழவு இயந்திரத்தினாலேயே மன்னார் பிரதேசசபை தவிசாளர் பதவியிழந்தார்!

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீட் முஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டதாக இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ஸினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது டன், அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பாவனையில் இருந்ததாகக் கூறப்படும் ஓர் உழவு இயந்திரம் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சமயம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் அது பிரதேச சபைக்குரியது எனத் தவறாக உரிமை கோரும் கடிதம் வழங்கி நீதிமன்றில் இருந்து உழவு இயந்திரத்தை விடுவித்து அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.

அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைப்பாடு தொடர்பில் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் பரிந்துரைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை 14 ஆம் திகதி தொடக்கம் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் ஆகிய பதவிகள் வெறிதாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment