கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கற்களை வீசியதாக 25 வயது கனடிய இளைஞன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
ஆயுதமேந்தித் துன்புறுத்தியதாக ஷேன் மார்ஷல் என்ற அந்த இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஒண்டாரியோ மாநிலத்தின் லண்டன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்பட்டார்.
செப்டம்பர் 6ஆம் திகதி ட்ரூடோ, தேர்தல் பிரசாரப் பேருந்தில் ஏறச் சென்றபோது அவர் மீது கல் வீசப்பட்டது.
எனினும், பிரதமர் ட்ரூடோவுக்குக் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
தேர்தல் பிரசாரத்தில், பொருள்களை எறிந்து, மற்றவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறியிருந்தார்.
COVID-19 தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் பரிந்துரைகளுக்காக ட்ரூடோவுக்கு எதிராக அவ்வப்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
பிரசாரத்தின்போது திரு. ட்ரூடோவை மிரட்டியதாக செப்டம்பர் 10ஆம் திகதி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கனடாவில், வரும் 20ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.