இலங்கை

புத்தளத்தில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் தோண்டியெடுக்கப்பட்டது!

புத்தளம் வேப்பமடு பிரதேசத்திலுள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்ட 56 வயதுடைய நபர் ஒருவரின் உடல் புத்தளம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான் அசேல டி சில்வா முன்னிலையில் நேற்று (10) காலை தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் வேப்பமடுவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹம்மட் நிஸ்தார் (56) என்பவரின் சடலமே இவ்வாறு தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை 4 ஆம் திகதி தனது வீட்டில் காலமான அவரது உடல், அன்றைய தினமே வேப்பமடு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. இதன்போது, விதிமுறைகள் பின்பற்றப்படவில்லையென தெரிகிறது.

அவ உயிரிழந்து இரண்டு நாட்களின் பின்னர் 6ஆம் திகதி திங்கட்கிழமை காலை அவரது மகள் பாத்திமா சஹானா (37) நோய்வாய்ப்பட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தாயார் மயக்கமடைந்து வீழ்ந்தார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரும் உயிரிழந்தது தெரிய வந்தது.

ஒரேநாளில் உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரினதும் உடல்கள் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது அவ்விருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இரவரது உடல்கள் நல்லடக்கத்திற்காக புத்தளத்திலிருந்து ஓட்டமாவடிக்கு கடந்த புதன்கிழமை (08) அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், 4 ஆம் திகதி உயிரிழந்த முஹம்மட் நிஸ்தார் (56) என்பவருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக சுகாதார பிரிவினர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அதனையடுத்தே சடலம்
தோண்டியெடுக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டயானாவின் ஒழுக்கக்கேட்டை தொடர சில அமைச்சர்கள் முயற்சி

Pagetamil

O/L வினாத்தாள் கசிவு: தனியார் வகுப்பு ஆசிரியரும், பாடசாலை ஆசிரியையும் கைது!

Pagetamil

மைத்திரி விலகினார்… விஜயதாச தலைவராகினார்!

Pagetamil

யாழில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்!

Pagetamil

யாழில் மொட்டு அமைப்பாளர் கைது!

Pagetamil

Leave a Comment