புத்தளத்தில் காணாமல் போன மீனவரின் சடலம் மன்னாரில் கரையொதுங்கியது!

Date:

புத்தளம் கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (10) மதியம் மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை சவேரியார் புரம் கடற்கரையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக கண்டு பிடிக்கப்பட்ட மீனவர் புத்தளம் வத்தளங்குன்று பகுதியைச் சேர்ந்த ராமையா ஜேசுதாசன் (47) என தெரிய வந்துள்ளது.

சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இதன் போது சடலம் ஒன்று கடலில் மிதப்பதைப் கண்ட நிலையில் சிலாவத்துறை கடற்படையினருக்கு தகவல் வழங்கினர்.

கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை மதியம் குறித்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

கடந்த 8 ஆம் திகதி குறித்த மீனவர் புத்தளம் கடற்பரப்பிலிருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளார்.

இந்த நிலையிலேயே இரு தினங்கள் கழிந்த நிலையில் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்