இலங்கை தமிழ் அரசு கட்சி இன்று (10) யாழில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி தன்னிலை விளக்கமளிக்கவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகள் இதுவரை 4 கடிதங்கள் அனுப்பி விட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் இணைந்து அனுப்பிய கடிதத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி கையொப்பமிட மறுத்திருந்தது.
மாறாக புலிகளின் போர்க்குற்றங்களையும் விசாரிக்க கோரி ஒரு கடிதம் அனுப்பியது.
இதனால் அதிருப்தியடைந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 பிரமுகர்களின் கையொப்பத்துடன் பிறிதொரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சி தன்னிலை விளக்கமளிக்க இன்று யாழிலுள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறது. இதில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொள்வார்கள்.