புத்திர சோகத்துடன் காலமான மற்றொரு தந்தை!

Date:

வவுனியா – மதியாமடு, புளியங்குளம் எனும் முகவரியில் வசித்து வந்த, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதி கேட்டுப் போராடிய செபமாலை இராசதுரை, தனது மகன் பற்றிய உண்மை நிலை ஏதும் அறியாமலேயே இன்று உயிரிழந்துள்ளார்.

2009ம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது 2009.05.24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் இவரது மகனான இராசதுரை விஜி என்பவரை கைது செய்து, குடும்பத்தினரிடமிருந்து தனியாக பிரித்து அழைத்துச் சென்றிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக மகனை தேடி வந்துள்ளார்.

வவுனியாவில் 1,668 நாட்கள் கடந்தும் நடைபெற்று வரும் “காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்தில்” செபமாலை இராசதுரை தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தனது மகன் பற்றிய உண்மை நிலை ஏதும் அறியாமலேயே இன்று உயிரிழந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர்...

யாழில் இருந்து தமிழகம் சென்றபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

காங்கேசன்துறை- தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இயந்திரம் பழு​தான​தால் நடுக்​கடலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்