ஆப்கான் புதிய இடைக்கால அரசின் தலைவர்: யார் இந்த முல்லா முகமது ஹசன் அகுந்த்?

Date:

தலிபான்களின் புதிய இடைக்கால அரசாங்கம் நேற்று அறிவிக்கப்பட்டது. புதிய பிரதமராக பதவியேற்று புதிய அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை முல்லா முகமது ஹசன் அகுந்த் ஏற்கிறார.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு புதிய அரசு நேற்று அறிவிக்கப்பட்டது. தலிபானின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் தலைமையில் அரசு அமையுமென எதிர்வுகூறப்பட்டிருந்தும், முல்லா அகுந்த் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் கீழான இரண்டு துணை பிரதமர்களில் ஒருவராக அப்துல் கனி பரதர் செயற்படுவார் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார்.

ஆப்கான் இடைக்கால அரசின் புதிய பிரதமர் முல்லா முகமது ஹசன் அகுந்த்

முல்லா அகுந்த் ஐநா தடைகள் பட்டியலில் இருக்கிறார். தலிபானின் சக்திவாய்ந்த முடிவெடுக்கும் அமைப்பான ரெஹ்பரி ஷுரா அல்லது தலைமைத்துவ கவுன்சிலின் நீண்டகால தலைவர் ஆவார். 1996-2001 வரை தலிபான்கள் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது அவர் முன்பு வெளியுறவு அமைச்சராகவும், பின்னர் துணை பிரதமராகவும் பதவிவகித்தார்.

தலிபானின் நிறுவுனர் முல்லா முகமது உமருக்கு அருகாமையில் இருந்து அவரது நம்பிக்கையை பெற்ற ஒருவர் முகுந்த்.

அகுந்த் தலிபான்களின் பிறப்பிடமான கந்தஹாரைச் சேர்ந்தவர்.

ஐ.நா.வின் தடை அறிக்கையில் அவரை “உமரின் நெருங்கிய கூட்டாளி மற்றும் அரசியல் ஆலோசகர்” என்று விவரித்துள்ளது.

அகுந்த் இயக்கத்திற்குள் -குறிப்பாக அதன் உச்ச தலைவர் ஹைபத்துல்லா அகுன்சாடாவால் மிகவும் மதிக்கப்படுகிறார்.

60 வயதுகளின் நடுப்பகுதியில் இருக்கும் அகுந்த், மத பின்னணியுடைய ஒருவரை விட,  தலைமைத்துவ கவுன்சிலின் மீதான அவரது கட்டுப்பாட்டைக் கொண்டு, இராணுவ விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர் என தலிபான்கள் கருதுகிறார்கள்.

சுமார் 1700 களை சேர்ந்த நவீன ஆப்கானிஸ்தானின் நிறுவனர் அஹ்மத் ஷா துரானியின் பஷ்டூன் பரம்பரையை சேர்ந்தவரே முல்லா அகுந்த்.

2001 ல் அமெரிக்க தலைமையிலான இராணுவ படையெடுப்பில் தலிபான்கள்  அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட குவெட்டா ஷுரா என்று அழைக்கப்படும் ராஹ்பரி ஷுரா கவுன்சிலில் அவர் ஒரு முக்கிய தலைமை மற்றும் வழிகாட்டுதல் பாத்திரத்தை வகித்தார்.

அவர் இஸ்லாம் பற்றிய பல படைப்புகளை எழுதியவர்.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்