இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை (09) யாழ். மாவட்டத்திற்கு வருகிறார்.
நாமல் ராஜபக்ஷ அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே யாழ் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது ஐ ரோட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் சோமசுந்தரம் வீதிக்கருகிலுள்ள பிள்ளையார் கோயில் குளம், வைத்தியசாலை வீதியில் வாகன தரிப்பிட திட்டம், இந்திய கலாசார மண்டபம், பாசையூர் பூங்கா பணி, கலைமகள் விளையாட்டு கழகம், 100 நகர திட்டத்தின் கீழ் மருதனார்மடம் நகர அபிவிருத்தி, அருணோதய கல்லூரி கேட்போர் கூட கட்டுமானம், வறுத்தலைவிளானில் வீட்டு திட்ட பணி, நாவற்குழியில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திட்டங்களை பார்வையிடவுள்ளார்.