தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் சமீபத்தில் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
தரவுத்தளத்தை இயக்கிய எபிக் லங்கா டெக்னோலஜீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் உள்ள மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்தகங்களுக்கு உரிமம் வழங்குவதை ஒழுங்குபடுத்தும் அமைப்பே தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையாகும்.
இதன் செயல்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் அதன் டிஜிட்டல் தரவுத்தளத்தில் சேமிக்கப்படும்.
கடந்த ஜூலை மாதம் கணினியில் உள்ள சில தரவுகள் நீக்கப்பட்lதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இது சதி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆரம்பத்தில், அவ்வாறான சம்பவமொன்று நடக்கவில்லையென மறுத்த அரசு, தற்போது ஒருவரை கைது செய்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1