25.5 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இந்தியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்- ஆயிஷா தம்பதி பிரிந்தனர்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவானும், மனைவியும் பிரிவதாக தகவல் வெளியாகியுள்ளத.

ஷிகர் தவானும், ஆயிஷா முகர்ஜியும் 2012 இல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தற்போது ஷிகர்தவானின் மனைவி ஆயிஷா தனக்கு விவகாரத்து ஆகிவிட்டது எனக்கூறி இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டு உள்ளார்.

அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா முகர்ஜி. 46 வயதான அவர் ஒரு குத்துச்சண்டை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தொழிலதிபரை மணந்தார். அலியா என்ற பெண் குழந்தையையும், 2005 இல் ரியா என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

பின்னர் விவகாரத்துப் பெற்று கடந்த 2012 ஆம் ஆண்டு ஷிகர் தவானை திருமணம் செய்துகொண்டார்.

10 வருடம் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட ஷிகர் தவான்- ஆயிஷா தம்பதிக்கு ஜோராவர் என்ற மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆயிஷா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவில், “முதலில் விவாகரத்து என்பது ஒரு அழுத்தமான வார்த்தை என்று, இரு முறை விவாகரத்து ஆகும் வரை நினைத்துக் கொண்டிருந்தேன். வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை, எவ்வளவு அர்த்தங்கள் அதில் புதைந்திருக்கின்றன என்பதை முதல் முறை விவாகரத்து ஆகும்போது புரிந்து கொண்டேன். முதல் முறை விவாகரத்து ஆகும்போது மிகவும் பயந்தேன். நான் மிகவும் தவறான ஒரு விஷயத்தை செய்வதாகவும், தோல்வி அடைந்தவளாகவும் உணர்ந்தேன்.

சுயநலக்காரியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாகவும் உணர்ந்தேன். என்னுடைய பெற்றோரை கைவிட்டதாக உணர்ந்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு அநீதி கொடுத்ததாக கருதினேன். விவாகரத்து அவ்வளவு மோசமான வார்த்தை.

இப்போது நினைத்துப் பாருங்கள் இரண்டாவது முறையாக நான் அதனைக் கடந்து செல்கிறேன். இது மிகவும் கொடூரமானது. இரண்டாவது முறையாக திருமணம் முறிந்த பின்னர் மிகவும் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் விவாகரத்தின் அர்த்தங்களைக் கற்றுக்கொண்டேன்.

விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறருக்கு அர்ப்பணிக்காமல் என்னை தேர்ந்தெடுப்பதாகும். சில நேரங்களில் நாம் செய்யும் எதுவுமே வேலைக்கு ஆகாது. ஆனால் அது பரவாயில்லை. எனது உறவுகள், எதிர்கால உறவுகளுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடங்களை கற்றுத்தருவது தான் விவாகரத்து. நான் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் வலிமையானவளாக இருப்பதே விவாகரத்து“ எனப் பதிவிட்டுள்ளார்.

ஆயிஷாவின் இந்தப் பதிவு தற்போது பரபரப்பாகி பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஷிகர் தவான் தனக்கு விவாகரத்து ஆனது குறித்து இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆன்மீக சங்கம நிகழ்வில் பாரிய தீ விபத்து

east tamil

மணமகனுக்கு வயது 64; மணமகளுக்கு 68 – முதியோர் காப்பகத்தில் காதல் திருமணம்

Pagetamil

தி.மு.கவில் இணைந்தார் சத்யராஜ் மகள்!

Pagetamil

காதலனை விசம் வைத்து கொன்ற யுவதிக்கு தண்டனை ஒத்திவைப்பு: பெண்ணல்ல பிசாசு என சாடல்!

Pagetamil

ரூ.6 கோடி மதிப்பிலான நகைகளுடன் மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா!

Pagetamil

Leave a Comment