அதிகாலையில் கோர விபத்து: இருவரை பலியெடுத்த டிப்பர்!

Date:

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பிக்கப் வாகனமும், டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து ஏ9 வீதி ஊடாக பயணித்த பிக்கப் வாகனமும் வவுனியா நோக்கி வந்த டிப்பர் வாகனமும் கனகராயன்குளம் சந்திக்கு அண்மையில் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து கனகராயன்குளம் போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஜி...

68 வயது மாமியை வல்லுறவுக்குள்ளாக்கிய மருமகன்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனது 68 வயதுடைய மாமியாரின் கழுத்தை நெரித்துக்...

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து வழுக்கி விழுந்த வெளிநாட்டு பெண் மரணம்

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்ததில் இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்