25.7 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

மன்னாரில் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) காலை இரண்டு மணி நேரம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க கோரி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக தற்போதைய கொரோனா காலப்பகுதியில் தமது சாதாரண கடமையை விட தற்போது அதிக நேரம் கடமையாற்றுவதாகவும், குறிப்பாக அன்ரிஜன்,பீ.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை பராமறித்தல் உள்ளிட்ட மேலதிக கடமைகளை மேற்கொண்டாலும், இதுவரை தமக்கான மேலதிக நேர கொடுப்பனவை வழங்கவில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொண்டனர்.

தமது மேலதிக நேர கொடுப்பனவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை அடங்கிய மகஜர் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் வகையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளித்தனர்.

இதன் போது மகஜரை பெற்றுக் கொண்ட மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேகைள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் கருத்து தெரிவிக்கையில்,,,,

மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரை வட மாகாண ஆளுநருக்கு உடனடியாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

Pagetamil

நுண் நிதிக்கடன் தொடர்பில் விரைவில் திருத்தம்

east tamil

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Pagetamil

உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

east tamil

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் தீர்மானம்

east tamil

Leave a Comment