அமைச்சர்களிற்கு கோட்டா அடிப்படையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசநாயக்க.
அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்திய போது, அமைச்சர் ரமேஷ் பத்திரண எ
இதற்கு முன் பாராளுமன்றத்தில் பேசிய ஆளுந்தரப்பினர் நிதி நெருக்கடியில்லை என்றனர். ஆனால் முதன்முதலாக இன்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் அரசாங்கம் நிதி நெருக்கடியில் உள்ளதை ஏற்றுக் கொண்டார். உண்மையை ஏற்றுக்கொண்டமைக்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.
கருத்திட்டங்கள் அவற்றின் வினைத்திறனிற்காக மட்டுமல்லாமல், கொமிசனிற்காகவே தீர்மானிக்கப்படுகிறது. கருத்திட்டங்களில் செலவளிக்கப்பட்ட பணத்தை விட, அதிக பணம் அமைச்சர்களின் கைகளிற்கே செல்கிறது.
கடந்த மாதம் லஃப் காஸ் கொண்டு வரப்பட்ட போது பெருமளவு பண இழப்பு ஏற்பட்டது.
செலாவணி கட்டுப்பாட்டு சபை சுயாதீனமாக செயற்பட வேண்டும். ஆணைக்குழு சில தீர்மானங்களை மேற்கொண்ட போது, பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் அங்கம் வகிக்கும் நவாரா என்ற நிறுவனம் தலையீடு செய்தது என்றார்.
இதன்போது குறுக்கிட்ட சாகர காரியவசம் எம்.பி “இது முற்றிலும் தவறானது. கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்க முன்னரே அந்த நிறுவன தலைவராக செயற்பட்டேன் என்னுடைய நிறுவன தலைவராக அரசியல் ரீதியானதோ, பொதுவானதோ, எந்தவித கொடுக்கல் வாங்கலையும் நான் செய்யவில்லை. இது அரசியல் ரீதியான பொறாமை காரணமான கூற்றாகும்“ என்றார்.
தனது உரையை தொடர்ந்த அனுர, “நான் ஏன் அவர் மீது பொறாமைப்பட வேண்டும். பெற்றோலிய அமைச்சர், கைத்தொழில் அமைச்சர் சொல்லியிருந்தால் அப்படி சொல்லலாம். நான் ஏன் பொறாமைப்பட வேண்டும்.
நவாரா நிறுவன உரிமையாளரும், பொதுஜன பெரமுன தலைவரும் ஒரே காரியவசம் என இப்பொழுதே தெரிந்து கொண்டேன். ஆணைக்குழு எடுக்க வேண்டிய தீர்மானங்கள் பற்றி அவர் கடிதம் எழுதுகிறார். நவாரா தலைவர் காரியவசம் வேறு, பெரமுன செயலாளர் காரியவசம் வேறா? இல்லையே.
தடுப்பூசி அரசியல் மயப்பட்டது எவ்வாறு?. சில அமைச்சர்களிற்கு கோட்டா வழங்கப்பட்டது. உலகில் எங்கு இப்படி நடந்தது. அமைச்சர் ரமேஷ் பத்திரண சொல்லுங்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த ரமேஷ் பத்திரண- “எந்த அரசியல்வாதிக்கும் தடுப்பூசி கோட்டா வழங்கப்படவில்லையென்பதை பொறுப்புடன் சொல்கிறேன்“ என்றார்.
அநுர உரையை தொடர்ந்த போது, “சரி. ஜெயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு 3,000 தடுப்பூசி வழங்கப்பட்டது. பந்துல குணவர்த்தனவிற்கு வழங்கப்பட்டது. இது பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சொல்லவில்லை. பகிரங்க ஊடக சந்திப்பிலும் சொல்லியுள்ளேன். முடியுமானால் வழக்கு தாக்கல் செய்யுங்கள். நீதிமன்றத்தில் சந்திக்க விரும்புகிறேன்“ என்றார்.