பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், அவரது மனைவி மற்றும் அவரது தந்தை ஆகிய சந்தேக நபர்கள் 3 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் வழக்கு விசாரணைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் இன்று (06) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான ராஜீந்திர ஜெயசூர்ய உத்தரவிடப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கு அழைத்து வந்த தரகர் பொன்னையா ஆகிய 3,4 வது சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1