ப்ரிமா நிறுவனம் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 12 ரூபாவால் அதிகரித்தமைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையில் புகார் அளித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ .87 என்ற கடுமையான விலைக் கட்டுப்பாடுகள் அரசால் செயல்படுத்தப்பட்ட நேரத்தில் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, இது போன்ற விலை உயர்வு சட்டவிரோதமானது என்றார்.
இத்தகைய விலை உயர்வு என்பது பல உணவுப் பொருட்களின் விலை உயர்வை குறிக்கும் என்று கூறினார்.
எனவே, அரசு தலையிட்டு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பொதுமக்களுக்கு ஏற்கனவே சுமை ஏற்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் தலையிட்டு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதிலிருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.