பலாங்கொடை பஹந்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோவை பதிவேற்றிய இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்களில் இருந்து அவற்றை நீக்குமாறு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த வீடியோ தொடர்பாக கணினி குற்றப்பிரிவு விசாரணைககளை ஆரம்பித்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதுபோன்ற வீடியோக்களை வைத்திருப்பதும் மற்றும் ஏனையவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்வதும் இலங்கை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
3
+1
2
+1
2
+1
4